ஓமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அறிவிப்பால் பீதியில் மக்கள்!!

0

தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வைரசை விட, மிகவும் தீவிரமாக பரவும் புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புது வகை வைரஸ் :

இந்தியாவில் புதிதாக, கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டள்ளது. மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தற்போது, ஓமைக்ரான் வைரஸின் உருமாறிய ஐ எச்யு பி.1.640.2 என்று பெயரிடப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கேமிரோனில் இருந்து பிரான்ஸ் வந்த பயணிக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவரோடு தொடர்பில் இருந்த 12 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், இந்த வைரஸ் குறித்த முழுமையான விவரங்கள் குறித்த தகவலை உலக சுகாதார நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here