தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?? வெளியான முக்கிய தகவல்!!

கடந்த 2003 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம், நிலையான ஓய்வூதியம் கிடைக்கததால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தி வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்தியாவில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ள, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்தி வருகிறது. இதே போல, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், தேர்தல் வாக்குறுதியாக புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்ததையடுத்து, அதனை அமலும் படுத்தி உள்ளனர்.

மொபைல் போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.., அப்போ உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்.., விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!!!

ஆனால், தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த போதும், அதனை இன்று வரையிலும் செயல்படுத்தவில்லை. இதனால், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன், மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தலைமையில் வரும் மே 19ம் தேதி புதிய ஓய்வூதியத் (CPS) திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்த திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க கோரியும் மாநில அளவிலான உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here