தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வர இருக்கும் புதிய  சலுகை.. தேர்தல் அறிக்கையை  வெளியிட்ட அதிமுக!!

0
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வர இருக்கும் புதிய  சலுகை.. தேர்தல் அறிக்கையை  வெளியிட்ட அதிமுக!!
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில்  உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரும் கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.

அதில் பல திட்டங்கள் மக்களுக்கு பயன் பெரும் வகையில் இருந்தது. குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.  அதாவது 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.450 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. நெட்டிசன்கள் ஒரு படி மேலே சென்று இப்படி பண்ணீங்கன்னா விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here