
ஒருநாள் உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று (நவம்பர் 16) 2வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் தேம்பா பாவுமா (0), குயின்டன் டி காக் (3) வந்த வேகத்தில் வெளியேறி ஏமாற்றம் தந்தனர்.

இதே நிலை தொடர்ந்தால், பவர் பிளே (10) ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், ரஸ்ஸி வான் டெர் டுசென் 5*, ஐடன் மார்க்ராம் 6* ரன்களுடன் களத்தில் இருந்தனர். இவ்வாறு தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை சமாளித்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், ஏற்கனவே முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.