உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு…, வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!

0
உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு..., வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!
உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு..., வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!

ஒருநாள் உலக கோப்பை தொடரானது இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவிலான 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், தற்போது புள்ளி பட்டியலானது புதுப்பித்து வெளியாகி உள்ளது. இதன்படி, 5 போட்டிகளையும் வென்றுள்ள இந்திய அணியானது 10 புள்ளிகள் மற்றும் +1.353 ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா (+2.370) மற்றும் நியூசிலாந்து (+1.481) அணிகள் தலா 8 புள்ளிகளுடன் 2வது மற்றும் 3 வது இடத்திலும், ஆஸ்திரேலியா (+1.142) அணி 6 புள்ளியுடன் 4 வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், இலங்கை (-0.205), பாகிஸ்தான் (-0.400), ஆப்கானிஸ்தான் (-0.969) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 5, 6 மற்றும் 7 வது இடத்தையும், பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் கடைசி 3 இடத்தையும் பிடித்துள்ளன. லீக் சுற்றுக்களின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here