உலகக்கோப்பை அணிக்கு புதிய கேப்டன்…, கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிரடி தகவல்!!

0
உலகக்கோப்பை அணிக்கு புதிய கேப்டன்..., கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிரடி தகவல்!!
உலகக்கோப்பை அணிக்கு புதிய கேப்டன்..., கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிரடி தகவல்!!

எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டனை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் (ஐசிசி) ஆனது, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் உலக கோப்பை தொடர்களை அணிகளுக்கு இடையே நடத்தி வருகிறது. இதில், கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முடிந்த நிலையில், நடப்பு வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டி மற்றும் ஒருநாள் உலக கோப்பை ஐசிசி நடத்த திட்டமிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, 9 அணிகளுக்குளுடன் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது, வரும் ஜூன் 7ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்காக, சர்வதேச அணிகள் அனைத்தும் இந்த ஆண்டு தொடக்கம் முதல், பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

“GOD OF CRICKET”-ஐ சந்தித்த விராட் கோலி…, உணர்ச்சி பொங்கிய தருணத்தின் வைரல் வீடியோ உள்ளே!!

இந்த வகையில், நியூசிலாந்து, பொதுவாக ஒருநாள், டி20 அணிக்கு கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணிக்கு டிம் சவுத்தி என இரு கேப்டன்கள் உள்ளனர். இதில், கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளதால், ஒருநாள் உலக கோப்பை பங்கு பெறமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், டிம் சவுத்தி மீது கவனம் திரும்பி உள்ளது. ஒருவேளை, இவரும் உலக கோப்பைக்கு கிடைக்கவில்லை என்றால், டாம் லாதம் கேப்டனாக முன்னிலையில் உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here