உலக கோப்பையில் சாதனைகளை அள்ளி குவிக்கும் விராட் கோலி…, ஒரே போட்டியில் இத்தனை ரெகார்ட்ஸ்ஸா??

0
உலக கோப்பையில் சாதனைகளை அள்ளி குவிக்கும் விராட் கோலி..., ஒரே போட்டியில் இத்தனை ரெகார்ட்ஸ்ஸா??
உலக கோப்பையில் சாதனைகளை அள்ளி குவிக்கும் விராட் கோலி..., ஒரே போட்டியில் இத்தனை ரெகார்ட்ஸ்ஸா??

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், நேற்று (நவம்பர் 5) இந்திய அணியானது தென் ஆபிரிக்க அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்களை குவித்திருந்தது. இதில், விராட் கோலி 101*, ஷ்ரேயாஸ் ஐயர் 77, ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்திருந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, நடப்பு உலக கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணியாக மாறி உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம், பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ளது.

அதாவது,

  • ஒருநாள் அரங்கில் தனது 49 வது சதத்தை பூர்த்தி செய்துள்ள விராட் கோலி, சச்சினின் ஒருநாள் சதங்களின் எண்ணிக்கை சமன் செய்துள்ளார்.
  • மூன்று வடிவ தொடரிலும், அதிக சதம் அடித்தவர்களில் விராட் கோலி 79 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஒருநாள் அரங்கில் சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் மட்டும் 6000 ரன்களை கடந்த 2வது இந்தியரானார். சச்சின் 6976 ரன்களுடன் முதல் இடத்தில் நீட்டித்துள்ளார்.
  • உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில், இலங்கையின் சங்கக்காராவை (1532) பின்னுக்கு தள்ளி விராட் கோலி (1533) 3வது இடத்தில் உள்ளார்.
  • நடப்பு உலக கோப்பையில், 8 போட்டிகள் விளையாடி 2 சதங்கள் உட்பட 543 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here