மக்களே கவனம்.., உங்க ஏரியா ரேஷன் கடையில் தப்பு நடக்குதா.., அப்போ உடனே இத பண்ணுங்க!!!

0
மக்களே கவனம்.., உங்க ஏரியா ரேஷன் கடையில் தப்பு நடக்குதா.., அப்போ உடனே இத பண்ணுங்க!!!
மக்களே கவனம்.., உங்க ஏரியா ரேஷன் கடையில் தப்பு நடக்குதா.., அப்போ உடனே இத பண்ணுங்க!!!

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவை மக்களுக்கு சரியாக சென்றடைய தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட ஆந்திர முதல்வர், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் இருந்து அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்றும், அந்த அரிசி இங்குள்ள கடத்தல் காரர்கள் மூலம் பட்டை தீட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இந்த குற்றத்தை தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆகியோரை பணியில் அமர்த்த உத்தரவிட்டிருந்தார். மேலும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவையும் கண்காணிக்க அறிவுறுத்தியிருந்தார்.

இதுலயும் தல தோனியின் CSK தான் முதலிடம்…, ரொனால்டோ அணியை முந்தி அபாரம்!!

இந்நிலையில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை பதுக்குவது, கடத்துவது மிகவும் குற்றம். இந்த குற்றத்தை யார் செய்தாலும் உடனடியாக அனைவரும் உடனடியாக 1800 599 5950 இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here