
நம் உடலின் வலிமையை அதிகரிக்க சத்தான உணவு பொருட்களை நம் உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதே போல் நம் முடி வளர்ச்சிக்கு தேவையான ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக்குகள் போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவதும் அவசியம். அந்த வகையில் நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான டிப்ஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
பாசிப்பயறு – 3 டீஸ்பூன்
கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தயிர் – 25 கிராம்
விளக்கெண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கும் இந்த ஹேர் பேக்கை prepare செய்வதற்கு முதல் நாள் இரவிலேயே ஒரு பவுலில் பாசிப்பயறு, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இப்போது இதனுடன் 25 கிராம் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து நம் தலைமுடியின் வேர்க்கால்கள் மற்றும் தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு நம் கூந்தலை சீயக்காய் போட்டு வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை குறைந்தது மாதத்தில் இரண்டு முறையாவது பாலோவ் செய்து வந்தால் நல்ல ஹேர் growth கிடைக்கும்.