இதுலயும் தல தோனியின் CSK தான் முதலிடம்…, ரொனால்டோ அணியை முந்தி அபாரம்!!

0
இதுலயும் தல தோனியின் CSK தான் முதலிடம்..., ரொனால்டோ அணியை முந்தி அபாரம்!!
இதுலயும் தல தோனியின் CSK தான் முதலிடம்..., ரொனால்டோ அணியை முந்தி அபாரம்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுடன் CSKவின் தல தோனி ஓய்வு பெற இருப்பதாக பரவலான தகவல் வெளியாகி வருகிறது. இதனால், தோனியை குறித்தும், CSK அணி குறித்துமே ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் அதிக பகிர்தல் உள்ளது. இந்த பகிர்தல் மூலம் CSK சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தில் அதிகம் தொடர்பு கொண்டதில் CSK அணி ஆசிய அளவில் சுமார் 9.97 மில்லியன் கணக்கில் பகிர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, விராட் கோலியின் RCB அணி 4.85 மில்லியன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.55 மில்லியன் என ஆசிய அளவிலேயே அதிக அளவில் பகிர்ந்து டாப் 3 இடத்தை பிடித்துள்ளது.

தமிழக விவசாயிகளே.., உங்களுக்கு இதெல்லாம் இலவசம்.., அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

இதற்கு அடுத்ததாக, கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் அல்-நாசர் FC அணி 3.50 மில்லியனுடன் 4 வது இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணி 2.31 மில்லியனுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது. இதன் மூலம், அளவில் ஐபிஎல் தொடரின் ஆதிக்கமே செலுத்தி வருவது தெளிவாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here