தமிழக மக்களே.., இனி சுலபமாக license வாங்கி விடலாம்.., முதல்வர் கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!!!

0
தமிழக மக்களே.., இனி சுலபமாக license வாங்கி விடலாம்.., முதல்வர் கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!!!
தமிழக அரசு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சொந்த வாகனம் இல்லாததால் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தேடி செல்கின்றனர். ஆனால் இது போன்ற நிலை இனிமேல் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது தமிழகத்தில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் மொத்தம் 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூபாய் 6 கோடி 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொந்த வாகனம் இல்லாதவர்களும் எளிதாக ஓட்டுனர் உரிமம் பெறலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here