நார்வே ஓபன் செஸ் போட்டிகள் 2021 – தமிழக வீரர்கள் இரண்டு பதக்கங்கள் வென்று சாதனை!!

0

இந்த ஆண்டுக்குரிய நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் இரண்டு பேர்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

புதிய சாதனை:

சமீபத்தில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் சிறப்பாக விளையாடி உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.  இதையடுத்து, தமிழக வீரர்கள் பலர் அவரின் விளையாட்டு திறமையால் ஊக்கம் பெற்றிருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இந்த வீரர் சாதனையை போல் மற்றொரு சாதனை செஸ் போட்டிகளில் படைக்கப்பட்டுள்ளது.  அதாவது, தமிழகத்தை சார்ந்த இரண்டு வீரர்கள் இந்த ஆண்டுக்கான நார்வே செஸ்  போட்டிகளில் கலந்து  கொண்டனர்.  தற்போது, இந்த இரண்டு வீரர்கள் வெற்றி ஒட்டுமொத்த நாட்டினருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, நார்வே ஓபன் செஸ் 2021 க்கான  போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.  சிறப்பாக விளையாடிய இந்த வீரர்களின் வெற்றிக்கு மிக சிறந்த பரிசு கிடைத்துள்ளது.  அதாவது, இவர்களில் குகேஷ் தங்க பத்தகத்தையும், இனியன் பன்னீர்செல்வம் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.  இதையடுத்து, பல்வேறு நபர்களும் இந்த வீரர்களுக்கு பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here