தடுப்பூசி போட்டுக்கோ.. ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிக்கோ – மாவட்ட ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு!!

0

திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் 3 பேருக்கு வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் அறிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமாக விளங்கி மக்களின் உயிரை காப்பாற்றுவது தற்போது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி துவங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

அதை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயங்கிய மக்கள் பின்னர் தொற்றின் வீரியத்தை கருத்தில் கொண்டு தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் தடுப்பூசி போடுவதை மேலும் ஊக்குவிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நாளை அங்கு நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்புசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு ரூ.10,000 மதிப்புடைய ஆண்ட்ராய்டு போன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here