இனி தக்காளி தேவையில்லை., அசத்தலான அசைவ ரெசிபிகள்.., ட்ரை பண்ணி பாருங்க!!

0
இனி தக்காளி தேவையில்லை., அசத்தலான அசைவ ரெசிபிகள்.., ட்ரை பண்ணி பாருங்க!!
இனி தக்காளி தேவையில்லை., அசத்தலான அசைவ ரெசிபிகள்.., ட்ரை பண்ணி பாருங்க!!

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிடுகிடுவென ஏறி விட்டது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளியை பார்த்து பார்த்து உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால் இனி சைவம் மட்டுமல்லாமல் அசைவ என இரண்டு உணவுகளையும் தக்காளி இல்லாமல், சமைக்க கூடிய 3 வகையான ரெசிபிகளை தற்போது பார்க்கலாம் வாங்க.

மட்டன் பெப்பர் fry

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 1/2 கிலோ
  • மிளகாய் வத்தல் – 5
  • பட்டை, கிராம், ஏலக்காய் – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/ 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த மட்டன் பெப்பர் fry செய்வதற்கு நாம் வாங்கி வைத்துள்ள மட்டனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் இதில் பட்டை,கிராம், ஏலக்காய் போட்டு அதோடு 5 மிளகாய் வத்தலை அதில் கிள்ளி போட்டு கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு தாளித்து கொள்ளவும்.

இப்போது இதில் வேக வைத்த மட்டனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் & உப்பு போட்டு நன்றாக வதக்கி விட்டு கொள்ளவும். மேலும் கறியில் இருக்கும் தண்ணீர் நன்றாக வற்றிய பின்பு அதில் மிளகு தூளை போட்டு நன்றாக கிளறி விட்டு கொள்ளவும். கடைசியாக சிறிதளவு மல்லி இலைகளை கிள்ளி கறியில் போட்டு அடுப்பை அப்பா செய்யவும். இப்போது நமக்கு சுவையான மட்டன் பெப்பர் fry ரெடி.

சிக்கன் கிரேவி ரெசிபி

தேவையான பொருட்கள்;

  • சிக்கன் – 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2
  • எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் – 5
  • பெரும் சீரகம் – 1 டீஸ்பூன்
  • சின்ன சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த சிக்கன் கிரேவி ரெசிபி தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய் வத்தல், பெரும் சீரகம், சின்ன சீரகம், இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

இப்போது இதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கி கொள்ளவும். இதோடு இதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, மேலும் அதில் தேவையான அளவு தண்ணீர் & உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொள்ளவும். இதன் பிறகு சிறிதளவு மல்லி இலைகளை கிள்ளி சிக்கனில் போட்டு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

முட்டை பெப்பர் ரைஸ்

தேவையான பொருட்கள்;

  • முட்டை – 2
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 4
  • மிளகு தூள் – 1

செய்முறை விளக்கம்;

இந்த முட்டை பெப்பர் ரைஸ் தயாரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 டீஸ்பூன் கடுகு போட்டு நன்றாக கொள்ளவும். பின் இதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன் பிறகு அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விடவும். பிறகு இதில் சிறிதளவு உப்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள், மிளகு தூள் சேர்த்து சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ளவும். மேலும் இதில் நாம் 2 கப் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான முட்டை பெப்பர் ரைஸ் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here