உணவின் சுவை, நறுமணத்தை உணர முடியவில்லையா..? கொரோனா அறிகுறியாக இருக்கலாம்..!

0
loss of taste and smell covid 19
loss of taste and smell covid 19

கொரோனா நோய் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேபோவது போல, கொரோனா வைரஸ் பற்றின தகவல்களும் தினம் தினம் புதுசு புதுசாக வெளிவருகிறது.பெரிய பெரிய நாடுகளே, பொருளாதாரத்தில் செழித்து கொழிக்கும் நாடுகளே விழித்து கொண்டிருக்கின்றன.. இது எந்த மாதிரியான வைரஸ் என்பது குறித்த ஆய்வுகளே இன்னும் நடந்து முடியவில்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருகின்றன.அகில் ஒன்று தான் இது என்னவென்றால் வாசனை,சுவை தெரியவில்லை அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சூதாட்டக்காரர்கள் சதவீதம் சரிவு – ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரிப்பு..!

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்

loss of taste and smell corona
loss of taste and smell corona

காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.இப்பொழுது சுவை,வாசனை தெரியவில்லை என்றாலும் கொரோன பாதிப்புதான் என அறிவித்துள்ளது.கொரோனா பரிசோதனை யாருக்கெல்லாம் பரிசோதிக்கவேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிவித்துள்ளது.அது என்னவென்றால் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஊருக்கு திரும்பி வந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 7 நாட்களுக்குள் பரிசோதனை செய்ய வேண்டும்.

* காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

* கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* அறிகுறிகள் அற்ற நேரடி மற்றும் உறுதி செய்யப்பட்டவர்களின் உயர் ஆபத்து தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும். இவர்கள் தொடர்பில் வந்த 5-10 நாளில் பரிசோதிக்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள், கடுமையான சுவாச தொற்று நோயாளிகள், அறிகுறி உடைய சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சுவை,வாசனை இழந்தால் கொரோனாவா ?

loss of taste and smell corona
loss of taste and smell corona

கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பணிக்குழு கூட்டம் இந்நிலையில் கடந்த 7-ந் தேதி நடந்தது. அதில்தற்போது கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற பலரும், திடீரென தாங்கள் சுவையையும், வாசனையையும் இழந்ததாக குறிப்பிட்டது பற்றி விவாதிக்கப்பட்டது.இந்த அறிகுறி உடையவர்களையும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.ஆனாலும் இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இருப்பினும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.இதற்கிடையே இதுபற்றி வல்லுனர் ஒருவர் கூறுகையில், “கொரோனாவுக்கான குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் இல்லை என்றாலும், காய்ச்சல் வருகிறபோது, வாசனை, சுவை இழப்பால் பாதிக்கப்படலாம். இது நோய் தொடங்கியதற்காக ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக கண்டறிவது, சீக்கிரமாக சிகிச்சையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்” என கூறினார்.அதே நேரத்தில் அமெரிக்க தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், கொரோனா அறிகுறி பட்டியலில் சுவை மற்றும் வாசனை இழப்பை கடந்த மே மாதம் சேர்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here