இனி இவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதி கிடையாது.., உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!!

0
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அண்மையில் கூட தைப்பூச விழாவை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பழனி முருகன் மற்றும் உப கோவில்களுக்கு இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இனி வரும் நாட்களில் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கான பலகைகளை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால் அவர்களுக்காக கோவிலில் ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்த பதிவேட்டில் இந்து அல்லாதவர்கள் சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here