ஷேர் ஆட்டோவால் விபத்து நிகழ்ந்தால் இழப்பீடு இல்லை – நீதிமன்றம் அதிரடி முடிவு!!

0

மக்கள் அனைவரும் முன்பு இருந்த காலங்களில் போக்குவரத்துக்காக பயன்படுத்துவது பேருந்து தான். எத்தனை மணி நேரம் ஆனாலும் காத்திருந்து அடித்து பிடித்து பேருந்தில் இடம் பிடிப்பர். இன்றும் ஒரு சில இடங்களில் இவ்வழக்கம் உண்டு. ஆனால் இப்போது மக்கள் அதிகமாக பயணிப்பதும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும் ஆட்டோ எனும் ஷேர் ஆட்டோ தான். 3 பேருக்கு மேல் பயணிக்க கூடாது என அரசு அறிவிருத்தியிருந்தும் 3 என்ன? 10 பேர்க்கு மேல் ஏற்றுவோம் என ஆட்டோக்கர்கள் ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு ஏற்றி விபத்து ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என நீதிமன்றம் கூறி உள்ளது.

ஷேர் ஆட்டோ

நடிகர் ரஜினிகாந்த் பாட்சா படத்தில் ஆட்டோக்காரனாக நடித்திருப்பார். அப்படத்தில் “நான் ஆட்டோகாரேன் ஆட்டோகாரேன்” என தொடங்கும் பாடலும் உண்டு. அதிலிருந்து ஆட்டோக்கள் பிரபலமாகி விட்டன. “கை தட்டுனா ஆட்டோ வரும்” என்று ஒரு வரி அப்பாடலில் வரும். ஆனால் இப்போது அப்படி இல்லை கை தட்டாமல் ஸ்டாப்க்கு சென்றாலே நம்மை இந்த ஆட்டோக்காரர்கள் அழைத்து விடுவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நமது அரசாங்கம் ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வித்தனர். கேட்பார்களா நம் ஆட்டோகாரர்கள்? விதிமுறைகளை மீறி செயல்படுகிறார்கள். தவறுதலாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு மட்டும் கேட்கிறார்கள். இதையறிந்து சும்மா இருப்பாரா நம்ம டிராபிக் ராமசாமி உயர்நிதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு!!

இதனை விசாரித்த கிளை நீதிமன்றம், ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க கூடாது என உத்தரவிட்டது. தமிழகத்தில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன? விதிகளை மீறி இயங்கி வந்த ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பியது. இதற்க்கு பதிலளித்த தமிழக அரசு 2019 வரை 1065 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிமம் ரத்து செய்யபட்டுள்ளது என கூறியது. இவ்வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here