மது பிரியர்களுக்கு வந்த புதிய சோதனை – தமிழக காவல் துறை எடுத்த அதிரடி முடிவு!

0
மது பிரியர்களுக்கு வந்த புதிய சோதனை - தமிழக காவல் துறை எடுத்த அதிரடி முடிவு!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குடிமகன்களை கையும் களவுமாக பிடிக்க தற்போது சென்னை போலீசார் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

மது பிரியர்கள் அதிர்ச்சி:

தமிழகம் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எந்த கடை வேணாலும் ஓடாமல் இருக்கலாம், ஆனால் மதுபான கடைகள் ஓடாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை. மேலும் தமிழகத்தில் அதிகமானோர் மது பிரியர்கள் இருக்கிறார்கள். இதனால் மதுவிலக்கு வேண்டும் என ஏராளமான தாய்மார்கள் மதுபானக்கடைகளை மூட சொல்லியும் முன்னதாக பல போராட்டங்கள் நடத்தினர். மது அருந்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், குடும்பம் உடைவதற்கு இந்த மது ஒன்று தான் காரணம் என தாய்மார்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் பல விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான கடைகளின் நேரத்தை குறைத்துள்ளது. மேலும் குடித்து விட்டு வாகனம் ஓடுவதால் பல விபத்துகளும் நேர்கிறது. அதற்கு காரணமாக இருபவர்களை பிடிப்பதற்காக Breath analyzer கருவியை கொண்டு காவல்துறை சாலையில் சோதனை செய்து வருகின்றனர். பகலில் அதிகமான போலீஸ்சார் இருப்பதால் இந்த விபத்துகள் தடுக்கப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படத்துல குழந்தையா நடிச்சவங்களா?? இவளோ கியூட்டா இருக்காங்க பாருங்கள்!!

இருந்தாலும் இரவில் குறைவான எண்ணிக்கையில் போலீஸார் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் நிலையில் விபத்து போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், Breath analyzer கருவி, அபராதம் விதிக்கும் இயந்திரங்களை கூடுதலாக வாங்க இருக்கிறோம். மேலும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் அதிகமான போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் இந்த கருவி வழங்க திட்டமிட்டுள்ளோம்’ என கூறி இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here