சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தேவஸ்தானம் அறிவிப்பு!

0
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - தேவஸ்தானம் அறிவிப்பு!
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - தேவஸ்தானம் அறிவிப்பு!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சபரிமலை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனால் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரவு பகலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடுக்கி மற்றும் கும்பாவுருட்டு அணை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று பேராவூரில் ஏற்பட்ட நிலச்சரிவால் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இடைவிடாது பெய்த கனமழையால் தற்போது இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அடுத்த 2 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதால் மக்கள் நலன் கருதி அவர்களுக்கு உதவும் வகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த மழையால் பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .சபரிமலையில் தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 6 மணிக்குள் கீழே திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் உள்ள பக்தர்களும் உடனே வெளியேற வேண்டும் என்று பத்தனம்திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here