B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகல்வி ஆணையர் அறிவிப்பு!

0
B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகல்வி ஆணையர் அறிவிப்பு!
B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகல்வி ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் முக்கிய அறிவுரைகள் வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி ஆணையர்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில இரண்டு வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருந்தது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களிடையே கற்றல் திறன் குறைய தொடங்கியது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வர தொடங்கியதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியது. மேலும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதாவது, கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல B.Ed., என்ற ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சி படிப்பில் இரண்டு ஆண்டுகள் சரியாக நிறைவு செய்திருந்தால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும். இதை தவிர அரசு பள்ளிகளில் பணியாற்ற தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் எனும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் ஆசிரியர் பயிற்சியில் கடைசி ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் பயிற்சி பெறும் விதமாக பயிற்சி நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் பள்ளிகளில் பயிற்சி ஆசிரியராக பணியாற்ற வேண்டும்.

இந்த நிலையில் இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். அதாவது, ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குறித்து முன்னதாகவே முடிவு செய்யப்பட்டது. தற்போது ஒதுக்கீட்டில் தேவைப்படும் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள பயிற்சி மாணவர்களை அருகில் உள்ள நடுநிலை பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்கு கற்றல் பயிற்சி அளிக்க உயர்நிலை பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அளவிலே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை ஒதுக்கீடு செய்யப்பட்ட உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கும் இரு பிரிவுகளாக பிரித்து சுழற்சி முறையில் அனுப்பி கற்றல், கற்பித்தல் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிக்கென எந்த பள்ளிகள் ஒதுக்கப்பட்டதோ அந்த உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே உரிய சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவுரைகள் அரசு உதவி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here