உலக நாயகனுடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார் – அப்டேட்டை கேட்டு குஷியான ரசிகர்கள்!!

0

உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கமல் படத்தில் சிம்பு:

இந்திய தமிழ் சினிமா துறையில் சிறு வயதிலே நடிக்க ஆரம்பித்து தற்போது வரை முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பு துறையில் மூத்த கலைஞராக திகழ்கிறார். இவர் இயக்குனராக இருக்க வேண்டும் என்று தான் சினிமா துறையில் நுழைந்தார், ஆனால் இயக்குனர் இமயம் கே. பாலசந்திரன் கமலை நடிகராக அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.

மேலும் சில படங்களுக்கு கதை ஏழுதியும் மற்றும் விஸ்வரூபம் போன்ற போன்ற வெற்றி படங்களை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் 50 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. இந்நிலையில் ராஜ் கமல் பட நிறுவனத்தின் 53 வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நான்கு படங்களை உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் ராஜ் கமல் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து 51 வது படமும், 52 வது படத்தில் கமலே நடிப்பதாகவும் மற்றும் 54 வது படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதற்கிடையில் 53 வது படத்தின் விவரத்தை வெளியிடாமல் இருக்கின்றனர். இந்நிலையில் கமலஹாசனின் 53 வது தயாரிப்பு படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அதன் விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here