நியூ சிம் கார்டு வாங்க போறீங்களா?? இன்னும் 2 நாள் தான் டைம்…, இல்லனா 10 லட்சம் அபராதம்!!

0
நியூ சிம் கார்டு வாங்க போறீங்களா?? இன்னும் 2 நாள் தான் டைம்..., இல்லனா 10 லட்சம் அபராதம்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் மொபைல் போன்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால், பல வித நன்மைகள் இருந்தாலும் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில், சிம் கார்டுகள் மூலம் பெண்களை ஏமாற்றுதல், பண மோசடிகள் போன்ற தற்போது அதிக அளவில் நடைபெற்று வருவதால் பல லட்சக்கான சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியது.
இதனை தொடர்ந்து புதிய விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, நியூ சிம் கார்டுகளை விற்பனை செய்யும் போதும், வாங்கும் போதும் ஆதார் உட்பட அனைத்து தரவுகளையும் பதிவு செய்ய வேண்டும். சிம் கார்டுக்குரிய வேலிடிட்டி முடிந்த பிறகு, அந்த எண்ணை 90 நாட்களுக்குப் பிறகு வாங்கும் மற்றொரு நபருக்கு இந்த தரவுகளை பதிவு செய்தல் பொருந்தும். தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here