அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றங்கள்…, மக்களுக்கு இது பயன் தருமா?? வெளியான அப்டேட்!!

0
அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றங்கள்..., மக்களுக்கு இது பயன் தருமா?? வெளியான அப்டேட்!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசு, தங்களது உள் மாவட்டங்களில் சாலை போக்குவரத்தை எளிமையாக்குவதற்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவின் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், போக்குவரத்து வளர்ச்சியை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடனும் சில வசதிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது, ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு கேமரா (DMS),  விஷன் சென்சார் கேமரா, காற்றை தடுக்கும் முன்புற கண்ணாடி ஜிபிஎஸ் கருவி, அவசர கால அழைப்பு உள்ளிட்டவைகளை முதலில் 10 பேருந்துகளில் பொருந்தி அவற்றின் பயன்களை அறிய உள்ளனர். இதன் மூலம், இடைவெளி விட்டு பேருந்துகள் இயக்கப்படுவதுடன் சாலைகளில் ஏதேனும் ஆபத்துக்கள் இருப்பது முன்னரே கண்டறியப்பட்டால் உடனே ஓட்டுநருக்கு தகவல் சென்றடையும். இதனால், ஓட்டுநர் அதற்கான மாற்று வழியில் செல்வார். இந்த புதிய வசதிகள் அனைத்து சோதனை ஓட்டத்திற்கு பின் மற்ற அரசு பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs AUS 5th T20: டிக்கெட் விற்பனை ஆரம்பம்…, எங்கு? எப்படி? வாங்கலாம்…, முழுவிவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here