வனிதாகிட்ட பேசுறதில்லை., லவ் டார்ச்சரா? போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவான்னு கேட்டாங்க? BB பாலாஜி பகீர் பேட்டி!!

0
போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவான்னு கேட்டாங்க? BB பாலாஜி பகீர் பேட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து பிரபலமானவர் தான் பாலாஜி.  இதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட இவருக்கு வனிதாவுடன் மோதல் ஏற்பட்டு வந்தது.  இப்படி இருக்கையில் இவர் நடித்துள்ள ”வா வரலாம் வா” என்ற படம்  ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது இவரிடம் நீங்கள் வனிதாவிடம் பேசுவீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இல்லை, அந்த நிகழ்ச்சிக்கு பின் அவருடன் பேசுவதில்லை என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இவரது கடந்த காலத்தில் இவருடைய காதலி இவரை ஏமாற்றியது குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது கல்லூரி படிக்கும் போது இவரை காதலித்து வந்த பெண் திடீரென இவருடன் பேசவில்லையாம். இதனால் எதார்த்தமாக செல்வதுபோல, அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரது அம்மாவிடம் பேசியுள்ளார். பின் தனது நம்பரை அந்த பெண்ணின் அம்மாவிடம் கொடுத்து தனக்கு கால் செய்ய சொல்லுபடி கூறியுள்ளார். இதற்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறாயா? என் மகளுக்கு, போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கவா என அந்த பெண்ணின் அம்மா கேட்டுள்ளாராம்.  இப்படி அந்த பெண் தன்னை லவ் பண்ணி ஏமாற்றி விட்டார் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here