புதிதாக வந்த தோல் பூஞ்சை நோய்..இந்தியாவில் முதல் முறையாக கண்டெடுப்பு!!!

0

இந்தியாவில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக கர்நாடகத்தில் கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றுக்குப் பின் குணமடைந்த நோயாளிகளிடையே அதிகரித்து வரும் பூஞ்சை தொற்று மருத்துவ உலகின் புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது. இந்த பூஞ்சைகள் ஆரோக்கியமான நபருக்கு எந்தவிதமான தொற்றுநோயையும் ஏற்படுத்தாது. இருப்பினும் ஏதேனும் உடல்நல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை நேரடியாக தாக்குகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு சோதனை மேற்கொண்டதில் தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது உறுதியானது. ஏற்கனவே கொரோனா நோயாளிகளை கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தாக்கி வந்த நிலையில் இந்த புதிய பூஞ்சை நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here