வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் – டிச.2ல் நாகப்பட்டினத்தில் கரையை கடக்கும்!!

0

தமிழகம் நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுவதுமாக மீளாத நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது புயலாக வலுப்பெற்று வரும் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

புயல் தாக்கம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், பொருளாதாரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய புயல் சின்னம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த புயல் உருவாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான விவசாய நிலங்கள், பயிர்கள், வாழை மரங்கள் என அனைத்தும் சூறாவளி காற்று, கனமழையால் உருக்குலைந்து போனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் தமிழக அரசு மேற்கொண்ட சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அதிகமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் மாத ஊரடங்கில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் – முதல்வர் தீவிர ஆலோசனை!!

இது வலுப்பெற்று புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும். இப்புயல் வரும் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் அருகே கரையை கடக்கும் எனவும், வட மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here