உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு – பீதியடையும் மக்கள்!!

1

தற்போது இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். மேலும் இன்றைய நிலவரப்படி இங்கிலாந்தில் இருந்த இந்தியா வந்தவர்களில் புதிதாக 14 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா:

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் சுமார் கடந்த 9 மாதங்களாக அவதி பட்டு வருகின்றன. மேலும் அதற்கான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் வேலையில் அனைத்து நாடுகளும் மும்முரமாக தயாராகி கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் யாவும் கொரோனாவில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. மேலும் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் என்றாலே அதற்கு உருமாறும் ஆற்றல் கொண்டது. தற்போது அதேபோல் சம்பவம் நடந்து அனைவரையும் பீதியடைய செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி புது வகையான வைரஸாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் ஆற்றல் பெற்றது. மேலும் இந்த புது வகை வைரஸ் முந்தய கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வீரியம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்துக்கு சேவையை வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் இந்த தடை காலம் நீடிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இத்தாலி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் 100கும் மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இன்று காலை நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இந்தியாவில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பரிசோதனை நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here