ஹர்திக் பாண்டியா படைத்த புதிய சாதனை…, முதல் கேப்டனே இவர் தானா?? அப்போ தோனி, கோஹ்லிலாம்??

0
ஹர்திக் பாண்டியா படைத்த புதிய சாதனை..., முதல் கேப்டனே இவர் தானா?? அப்போ தோனி, கோஹ்லிலாம்??
ஹர்திக் பாண்டியா படைத்த புதிய சாதனை..., முதல் கேப்டனே இவர் தானா?? அப்போ தோனி, கோஹ்லிலாம்??

இந்தியாவின் முன்னணி கேப்டன்கள் படைக்காத புதிய சாதனை ஒன்றை ஹர்திக் பாண்டியா நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேற்றுடன் விளையாடி முடித்தது. இந்த தொடருக்கான, 2வது போட்டியில் வெற்றி பெற்றும், கடைசி போட்டியை டிரா செய்தும் இந்திய அணி, தொடரை கைப்பற்றியது. இதில், முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கை விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரை, இந்திய அணி கைப்பற்றியதன் மூலம், ஹர்திக் பாண்டியா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, கடந்த ஜூன் மாதம் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடியது. இந்த 2 போட்டியையும் இந்திய அணி வென்று தொடரை வென்றது.

IND vs BAN: ஜடேஜாவுக்கு பதில் சூர்யகுமாரா?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு தான் என்ன??

இதன் மூலம், இந்திய அணியை 5 டி20 போட்டிகளில் வழிநடத்தி தோல்வியை சந்திக்காத முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா அடைந்தார். கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ள தோனி, விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோரை ஹர்திக் பாண்டியா நிகழ்த்திய இந்த சாதனையை படைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய அணியின், டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டன் ஆவதற்கான ரசிகர்களின் கருத்துக்கள் தற்போது வலுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here