கோலாகலமாக தொடங்கிய கலைத்திருவிழா.., போட்டியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!!

0
கோலாகலமாக தொடங்கிய கலைத்திருவிழா.., போட்டியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!!
கோலாகலமாக தொடங்கிய கலைத்திருவிழா.., போட்டியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!!

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும் கலைத்திருவிழா குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

கலைத்திருவிழா:

தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வேளையில் அதிக விடுமுறை வருவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் சென்னை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. மேலும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகள் இன்று முதல் வருகிற நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறும்.

தமிழகத்தில் நாளை Power Cut (24.11.2022) – எந்தெந்த பகுதின்னு தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!!
இதனை தொடர்ந்து வட்டார அளவில் நடக்கும் கலைத் திருவிழா வருகிற நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரையிலும், அதற்கடுத்து மாவட்ட அளவில் டிசம்பர் மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. மேலும் மாநில அளவில் அடுத்த வருடம் 2023 ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் நடக்க இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில போட்டியில் வெற்றி பெற்ற முதல் 20 மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here