IND vs BAN: ஜடேஜாவுக்கு பதில் சூர்யகுமாரா?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு தான் என்ன??

0
IND vs BAN: ஜடேஜாவுக்கு பதில் சூர்யகுமாரா?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு தான் என்ன??
IND vs BAN: ஜடேஜாவுக்கு பதில் சூர்யகுமாரா?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு தான் என்ன??

பங்களாதேஷுக்கு எதிரான தொடருக்குள் ஜடேஜா அணிக்கு திரும்புவார் என்பது கேள்விக்குறியான நிலையில், சூர்யகுமார் அணியில் இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜடேஜா:

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியதோடு, தவான் தலைமையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வரும் 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அங்கு, பங்களாதேஷிற்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், 2 டெஸ்ட் தொடர்களையும் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐயானது, கடந்த மாதமே அறிவித்துவிட்டது. இதற்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய ஜடேஜாவும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

CSK விலிருந்து நீக்கப்பட்டதுக்கு என்ன காரணம்?? பதில் அளித்த சாதனை நாயகன் ஜெகதீசன்!!

ஆனால், ஜடேஜா அணிக்கு திரும்புவது என்பது அவரது உடல் தகுதியை பொறுத்தே அமையும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தொடருக்குள், ஜடேஜா முழு உடற்தகுதி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஜடேஜாவுக்கு பதில், சூர்யகுமார் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here