“தற்கொலைகளை தடுப்பதை விட நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”…, அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

0
"தற்கொலைகளை தடுப்பதை விட நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்"..., அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

இந்தியாவில் தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது, மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட தொழில் சார்ந்த உயர் கல்வியில் சேர்க்க நுழைவு (தகுதி) தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், மருந்தும் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கு, மாணவர்கள் இத்தகைய நுழைவு தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு தனி பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு வசதி இல்லா நிலை, தொடர்ந்து பல முறை எழுதியும் தோல்வியடையும் நிலை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் தான், நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வகையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சியால் புகழ்பெற்ற ராஜஸ்தானில் கோட்டா நகரில் தொடர்ந்து தற்கொலை நிகழ்வது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதாவது, நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விடுமுறை., திடீர் உத்தரவை பிறப்பித்த குஜராத் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here