சார்ஸ்-கோவிட் 2 கட்டுப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் – சுகாதார துறை அறிக்கை!!

0

இந்தியாவில் இதுவரை புதிய உருமாற்றம் அடைந்த வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 6 பேருக்கும் தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார துறையின் நடவடிக்கைகள்:

இந்நிலையில் இந்த உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களின் மாதிரிகள் இந்திய சார்ஸ்-கோவிட்-2 மரபணு வரைபட கூட்டமைப்பின் கீழ் உள்ள பத்து அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஷிவானியோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் – கதறும் பாலாஜி!!

மேலும் கோவிட்-19 பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தனிமைபடுத்தி கண்காணித்தல் ஆகியன குறித்த தேசிய பணிக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 26ம் தேதியன்று நடந்தது. சார்ஸ்-கோவிட் 2 மரபணு மாற்றங்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாடு நடைமுறைகள் டிசம்பர் 22ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு:

இது குறித்து தமிழக சுகாதார செயலர் “பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த பயணிகளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“பிரிட்டனிலிருந்து வந்த 30 பயணிகளின் மாதிரிகளை புனே ஆய்வத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here