கொரோனா பரவல் எதிரொலி – மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி வரும் நிலையில் தற்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

பிரதமர் மோடி ஆலோசனை:

நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே போல் நாட்டில் தினமும் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாநில/யூனியன் பிரதேச முதல்வர்கள், சுகாதாரத்துறையினருடன் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். மேலும் தடுப்பூசி பணிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இன்று முதல் ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

இந்நிலையில் இன்று மீண்டும் பிரதமர் மோடி மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அடுத்ததாக நாட்டின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் இன்று மாலை 4.30 மணிக்கு நரேந்திரமோடி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சிறந்த மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here