பண்டிகை காலத்தில் கிடுகிடுவென உயரும் முட்டையின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

முட்டையின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.4.70-க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி முட்டையின் தேவை அதிகமாக உள்ளது. முட்டையின் உற்பத்தி குறைவதாலும், தேவை அதிகரிப்பதாலும் விலை அதிகரித்துள்ளது என்று டாக்டர். பி. செல்வராஜ் கூறியுள்ளார்.

முட்டையின் தேவை:

முட்டையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவடைகிறது. முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு நல்லது. தலைமுடி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு வேலை உணவிற்கு பதிலாக வயதிற்குகேற்ப மூன்று அல்லது இரண்டு அவித்த முட்டைகளை சாப்பிடும்போது பசியும் ஏற்படாது நமக்கு தேவையான ப்ரோட்டின்களும் கிடைக்கிறது. முட்டை ஒரு சிறந்த உணவாக மட்டுமின்றி மற்ற உணவுகளை சமைப்பதற்கும் முட்டை பயன்படுகிறது. இவ்வாறு, முட்டையின் தேவை அதிகமாக உள்ளது.

டாக்டர். பி. செல்வராஜ்,

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் கடந்த திங்கள்கிழமை அன்று தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் தான் முட்டையின் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது என்றும் டாக்டர். பி.செல்வராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா நோய் தடுப்பிற்கு முட்டை சிறந்த உணவாக இருப்பதால் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். முட்டையின் தேவை அதிகரிப்பதால், 30 காசுகள் உயர்த்தப்பட்டது. இதேபோல், மற்ற மண்டலங்களிலும் முட்டையின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

30 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவர்களுக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து கொள்ள வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இதேபோல், பல்லடத்திலும் முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டை கோழியின் விலை ரூ.104-ஆகவும், கறிக்கோழியின் விலை ரூ.101-ஆகவும் நிர்ணயித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here