இளையராஜாவை சந்தித்த பிரபல நடிகர்…, காரணம் இது தானாம்?….,

0
இளையராஜாவை சந்தித்த பிரபல நடிகர்..., காரணம் இது தானாம்?....,
இளையராஜாவை சந்தித்த பிரபல நடிகர்..., காரணம் இது தானாம்?....,

தெலுங்கு உலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ள புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சந்திப்பு

தமிழ் திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. 1970களில் ஆரம்பித்த இவரது திரை இசைப்பயணம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இவரது இசையமைப்பில் உருவான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படிப்பட்ட இசைமையைப்பாளரை தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா சந்தித்துள்ள புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, நடிகர் நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ என்ற திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தில் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடிகை க்ரீத்தி ஷெட்டி மற்றும் ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இசைமையைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடிகள் தாண்டி நிறைவு., முழு விபரம் உள்ளே!!!

இந்த நிலையில், ‘கஸ்டடி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜாவை, நடிகர் நாக சைதன்யா இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘இளையராஜாவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய ஆனந்தம். அவரது இசையை கேட்டு வளர்ந்திருக்கிறேன். இப்போது, அவர் எனது திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here