அதிவேகமாக பரவும் ஹாங்காங் காய்ச்சல்., இது ஒன்னு தான் தீர்வு? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!!!

0
அதிவேகமாக பரவும் ஹாங்காங் காய்ச்சல்., இது ஒன்னு தான் தீர்வு? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!!!
அதிவேகமாக பரவும் ஹாங்காங் காய்ச்சல்., இது ஒன்னு தான் தீர்வு? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்!!!

உலகெங்கும் காலநிலை மாற்றத்தால் உருவாகி வரும் வைரஸ் நோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதுவும் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற வைரஸ் நோய் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வகையை சேர்ந்த வைரஸாக உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வைரஸ் “ஹாங்காங் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போதைய சூழ்நிலையில் மூடுபனி விலகி அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருவதால் இந்த வைரஸ் வீரியம் எடுத்து வருகிறது. இதையடுத்து டெல்லியில் இந்த வைரஸின் A வகை தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மேலும் இவை கொரோனாவை போல நோய்வாய்ப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு எளிதில் பரவி வருகிறது. இதனால் நெரிசல் மிக்க இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்வது வரவேற்கத்தக்கது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் புதிய திட்டத்தால் கேள்விக்குறியாகும் மகளிர் இலவச பயணம்? முழு விளக்கம் தர பொதுமக்கள் வேண்டுகோள்!!

மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் மருத்துவர்களிடம் அணுகுவது நல்லது. பின்னர் திரவ நிலையில் உள்ள உணவுகளை உட்கொண்டு நன்கு ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும் இந்த வைரஸ் இதயம், நுரையீரல் பலவீனமானவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும். அதன்படி கர்ப்பிணி பெண், இளம் குழந்தை, முதியோர் ஆகியோர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here