தனுஷை தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
தனுஷை தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு!!
தனுஷை தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “பேட்ட” திரைப்படத்தில் வில்லனாக நடித்து பேமஸான நவாசுதீன் சித்திக் இந்தியில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். சினிமாவில் பிசியாக இருந்து வரும் நவாசுதீன் சித்திக்கின் சொந்த வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாக மாறி உள்ளது. இவர் மீது அவரது மனைவி அலியா சித்திக் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கல்யாணம் ஆனதில் இருந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தன்னையும், தனது குழந்தைகளையும் காவலாளிகளை வைத்து பலவந்தமாக நவாசுதீன் சித்திக் வெளியேற்றி விட்டதாக அலியா புகார் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து நவாசுதீன் சித்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர், முதலில் நானும் ஆலியாவும் பல வருடங்கள் ஒன்றாக இல்லை, நாங்கள் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டோம். இது என் குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும்.

ஐயோ.., என்ன ஸ்ருதி இதெல்லாம்.., ஒரே போஸ்ல இப்படி சாச்சுடீங்களே.., பரிதவித்து போன இளசுகள்!!

என் குழந்தைகளை 45 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாமல் பணயக் கைதிகளாக வைத்து வருகிறார் ஆலியா. குழந்தைகளை காரணம் காட்டி ஒவ்வொரு முறை துபாய்க்கு வந்து என்னிடம் அதிக காசு வாங்கி செல்கிறார். அவளுக்கு பணத்தாசை பிடித்திருக்கிறது. அதனால் தான் என் மீதும் என் தாயின் மீது புகார்களை அடுக்கி வருகிறார். குழந்தைகள் ஒவ்வொரு முறை துபாய்க்கு வரும் போது, என் அம்மாவிடம் அதிகம் பாசத்துடன் இருப்பார்கள்.

அவள் என்னுடைய பெயரை கெடுக்கவே இந்த மாதிரி செயலை செய்து வருகிறார். வெளியே இருந்த மாதிரி வீடியோ போட்டவளுக்கு, வீட்டை விட்டு வெளியே வரும் போது ஏன் வீடியோ எடுக்கவில்லை. அவள் இது போன்ற அதிக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதை அவள் பொழுதுபோக்குக்காக செய்கிறாள். நான் ஷோரா & யானியை அதிகம் நேசிக்கிறேன். நான் சம்பாதிக்கும் எல்லாம் எனது குழந்தைகளுக்கு தான். அவர்களின் வாழ்க்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவுக்கு விவாகரத்து ஆனது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here