மியான்மரில் கடும் நில அதிர்வு – கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்!!

0
gujarat earthquake

மியான்மரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

கடுமையான நில அதிர்வு:

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.  பல லட்சம் மக்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸை முழுமையாக அழிக்கும் வழி இன்னமும் வந்த பாடில்லை.  இந்த நிலையில், மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வருவதற்குள் இயற்கை பேரிடர்கள் நிகழ்வது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த வகையில் வெளிநாட்டில் நடந்த நில அதிர்வால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


அதாவது, இன்று அதிகாலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க ஆரம்பித்தது.  இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர்.  இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.  இது மட்டுமில்லாமல், இங்கு ஏதேனும் பொருள் இழப்புகள் மற்றும் உயிர் சேதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதால் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


ஆனால், பொருள் இழப்புகள் குறித்த எந்த ஒரு அறிக்கையும் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.  இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.  மேலும், இந்த இந்த நிலநடுக்கம் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருப்பது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here