இந்தியாவில் ஒரே நாளில் 300 ஐ நெருங்கிய கொரோனா மரணங்கள் – அடுத்த அலையின் அறிகுறியா??

0

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தற்போதைய நிலவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 295 மரணங்கள் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட் மாத இறுதியில் குறைந்த தொற்றால் பல மாநில அரசுகள் அடுத்தடுத்து தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த இத்தகைய தளர்வுகளால் சில இடங்களில் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க தொடங்கியது. தற்போது இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்து வருகிறது.

 

இதனால் கேரளாவின் அண்டை மாநில எல்லைகளில் நோய் தடுப்பு எண்ணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி,  கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 295 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் தற்போது வரை இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,478,419 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,45,133 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 43, 938 பேர் மீண்டுள்ளனர். இதனால் மீண்டவர்கள் எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here