கிராமத்து ஸ்டைலில் “மட்டன் கோலா உருண்டை” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

0

மக்களால் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவான மட்டனில் ப்ரோட்டீன், புரதச்சத்துக்கள் என்று எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. இன்று மட்டனில் ஸ்பெஷலாக செய்யப்படும் “மட்டன் கோலா உருண்டை” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • மட்டன் கொத்துக்கறி – 500 கிராம்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கச கசா – 1 டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு – 10
  • வறுத்த பொட்டுக்கடலை – 1 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – 2
  • பூண்டு – 2
  • கிராம்பு – 2
  • பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
  • முட்டை – 1
  • கொத்தமல்லி இலை – தேவையான அளவு
  • கசகசா – 2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்

செய்முறை

முதலில், ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும். பின், இது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும்.

சந்தியா சரவணன் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடும் சிவகாமி மாமியார் – ராஜா ராணியில் வெடுக்கும் பிரச்சனை!!

பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின், இந்த கலவையை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், அதில் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான்!!

பாரம்பரிய ஸ்டைலில் “மட்டன் கோலா உருண்டை” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here