திடீரென தன் வழக்கத்தை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் – போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

0
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!
திடீரென தன் வழக்கத்தை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

அசைவ பிரியரான, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீரென தான் சைவத்துக்கு மாறி உள்ளதாக போட்டோவுடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை  இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

தமிழ் திரையுலகின், முன்னணி இசையமைப்பாளராக  திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவரது இசையில் உருவான இரவின் நிழல் திரைப்படம், தற்போது அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவர் இசையமைத்த கோப்ரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இது போக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தன் மிகப்பெரிய உழைப்பை போட்டுள்ளார்.

இவரது குரலில் உருவான, பொன்னி நதி என்ற பாடல் இணையத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, அசைவ பிரியரான ஏ ஆர் ரகுமான் அடுத்த 10 நாட்களுக்கு சைவனாக மாறுகிறேன் என குறிப்பிட்டு, ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இது குறித்த, காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது மொஹரம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பு, அவர் அசைவ உணவை தவிர்த்து விடுவார் என்றும், அதற்காகத்தான் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும்  பேசப்படுகிறது. தற்போது இந்த பதிவு பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here