Friday, May 17, 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – டி ராஜேந்தர் தோல்வி!!

Must Read

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம்:

தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும், நடிகைகளையும் உறுப்பினராக கொண்ட சங்க அமைப்பாகும். இது 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு திரைப்படத்துறை தொடர்புடைய பிரச்சனைகளுக்காக பல நிகழ்வுகளை நடத்தி உள்ளனர். சமூகப் பிரச்சனைகளுக்காகவும் அறப்போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 338 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பி.எல்.தேனப்பன் 88 வாக்குகள் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், அதிக வாக்குகள் பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வு செய்யப்பட்டார். ஓட்டளிக்க தகுதியான 1300 பெயர்களில், 1050 ஓட்டுகள் மட்டும் பதிவாகியுள்ளது. மொத்தம் பதிவான 1050 ஓட்டுகளில் 17 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பதவிகளுக்கான ஒட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -