3 வருடம் வரை கெட்டுப்போகாத இட்லியை கண்டுபிடித்த மும்பை பேராசிரியை…! விண்வெளியிலும் பயன்படுத்தலாம்..!

0

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் உடல்நிலை சரியில்லாத நேரங்களிலும் எளிதில் உண்ணக்கூடிய உணவாக இட்லி உள்ளது. இது எளிதில் செரிமானம் அடையக் கூடிய நமது பாரம்பரிய உணவாகும்.
அது மட்டுமில்லாமல் உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்லியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்லிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இனி உணவுகளை கெடாமல் பார்த்துக் கொள்ளலாம்..!

இட்லியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதற்கு இதற்கான மாவு தயார் செய்வதும் சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்லியும் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதில்லை. எனவே உணவு பண்டங்களைக் கெடாமல் பார்த்துக்கொள்ள ஒரு புதிய அறிவியல் முறையை மும்பையைச் சேர்ந்த பேராசிரியை கண்டுபிடித்துள்ளார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன்..!

இது குறித்து கூறிய மும்பை பல்கலைக்கழக பேராசிரியை, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும், எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி வேறு எந்த விதமான ரசாயனங்களை கலக்காமல் உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

விண்வெளியிலும் பயன்படுத்தலாம்..!

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இந்த எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையின் மூலம் ராணுவ வீரர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் பெரிதளவில் பயன்பெறலாம். விண்வெளியில் கூட உணவு பண்டங்கள் கெடாமல் பார்த்துக்கொள்ள இந்த் முறை பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்று தெரிகிறது. தற்போது 3 ஆண்டுகளாக உள்ள இந்த காலத்தை மேலும் உயர்த்த புதிய ஆராய்ச்சிகளை இவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here