மும்பை லோக்கல் ஏசி மின்சார ரயிலை இயக்கும் முதல் பெண்மணி..!

0

மும்பையில் ஏசி லோக்கல் மின்சார ரயில் 2017ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக பெண் ஒருவர் பைலட் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மும்பையில் லோக்கல் மின்சார ரயிலினை பயன்படுத்துவோர் மிக மிக அதிகம். இதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு முதல் ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. மத்திய ரெயில்வே மூலம் தானே- பன்வேல் இடையே மின்சார ஏ.சி. ரெயில் வருகிற 30-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ஏசி ரயிலை பெண் டிரைவர் மனிஷா மஷ்கே இயக்க உள்ளார். மும்பையில் புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்கும் முதல் பெண் என்ற சிறப்பை மனிஷா மஷ்கே பெறுகிறார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்த ரயிலானது தினமும் 16 முறை இயக்கப்பட உள்ளது. காலையில் இருக்கும் கூட்டநெரிசலின் காரணமாக 3 முறை இயக்கப்பட உள்ளது. மனிஷா மஷ்கே ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு முடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு சரக்கு ரெயிலில் உதவி டிரைவராக பணியில் சேர்ந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மோட்டார் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு முதல் மின்சார ரெயில்களை இயக்கி வருகிறார். பட்டப்படிப்பு முடித்ததும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதுதான் எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here