வெற்றிநடை போடுமா மும்பை இந்தியன்ஸ் – இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!!

0

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் ஆன மும்பை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது.

ஐபிஎல் 2020:

பல தடைகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்கனவே 5 விளையாடிய போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று மும்பை அணி 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 5வது இடத்தில் உள்ளது. பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முதல் 4 இடங்களுக்கு முன்னேற வேண்டும் என்பதால் இரு அணிகளுக்கு இடையிலும் கடுமையாக போட்டி நிலவும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா என அசுர பலத்துடன் உள்ளது. பவுலிங்கில் பும்ராஹ், பேட்டின்சன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸை வீழ்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜாஸ் பட்லர், சாம்சன், ரியான் பராக் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர், ராகுல் டிவெட்டியா, டாம் கரண் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் தலா 10 வெற்றிகளை பெற்றுள்ளன. இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் இன்று மோத உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here