IPL 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய வீரர்.., மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிப்பு!!

0
IPL 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய வீரர்.., மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிப்பு!!
IPL 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய வீரர்.., மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிப்பு!!

மும்பை இந்தியன்ஸ் அணியானது, தங்களது அணியின் நட்சத்திர வீரரான பும்ராவுக்கு தகுந்த மாற்று வீரரை தற்போது அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து தொடங்க உள்ளது. இன்று (மார்ச் 31) இரவு 7.30 மணி முதல் தொடங்க உள்ள இந்த போட்டிக்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த சீசனில் இருந்து, பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி வந்த வண்ணம் உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், இவர்களுக்கு தகுந்த மாற்று வீரர்களையும், அணி நிர்வாகம் அறிவித்த வண்ணம் வருகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகுவது பல நாட்களுக்கு முன்னரே உறுதியான நிலையில், தற்போது தான் இவருக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாற்காலிக்காக சண்டையிட்ட தனியார் ஊழியர்கள்.., ஆத்திரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.., போலீசார் வலைவீச்சு!!!

வலது கை பந்து வீச்சாளரான சந்தீப் வாரியரை பும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 69 க்கு மேற்பட்ட டி20 உள்ளூர் போட்டிகளில், விளையாடி உள்ள இவர் 362 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றி உள்ளார். இவர் பும்ராவுக்கு இணையாக இருப்பாரா என்பதை இந்த ஐபிஎல் சீசன் மூலம் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here