ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே இந்தியர் மட்டுமே!!

0
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே இந்தியர் மட்டுமே!!
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே இந்தியர் மட்டுமே!!

சர்வதேச அணிகள் அனைத்தும் ஒருநாள் தொடரில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், கடைசி 5 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

டாப் 5:

இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதால், சர்வதேச அணிகள் அனைத்தும் இந்த ஒருநாள் தொடரிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், கடைசியாக நடைபெற்ற 5 ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் 407 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, இந்தியாவின் இஷான் கிஷன் பங்களாதேஷிற்கு எதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் 383 ரன்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் காலிறுதி., சாம்பியன் வீரர்களை அசால்ட்டாக வென்ற இந்திய வீரர்கள்!!!

மேலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 367, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 361 மற்றும் டிராவிஸ் ஹெட் 337 ரன்களுடன் டாப் 5 இடத்தில் உள்ளனர். இனி வரும் போட்டிகளின் மூலம், இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட்ட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here