“இது தமிழகம் இல்ல தமிழ்நாடு” – படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழுவினர்!!!

0
"இது தமிழகம் இல்ல தமிழ்நாடு" - படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழுவினர்!!!

இயக்குனர் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் அமீர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் அமீர். அந்த வகையில் இவர் இயக்கிய பருத்தி வீரன், மவுனம் பேசியதே, ராம் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. தற்போது இயக்கத்தில் இருந்து நடிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

கடைசியாக இவர் நடித்த மாறன் திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. தற்போது ஆதம்பாவா தயாரித்து இயக்கும் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போதைய அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே இந்தியர் மட்டுமே!!

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இயக்குனர் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் முன்னாள் தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா பெரிய கட் அவுட்-களுடன் அமீர் கட் அவுட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here