ஊருக்குள் புகுந்த அரிய வகை உடும்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

0

யாஸ் புயல் கொல்கத்தாவின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது, மேலும் நிலச்சரிவு காரணமாக அங்கு நீர் நிலைகள் உயர்ந்துள்ளது. இதனால் ஊருக்குள் புகுந்த சற்றே பெரிய அளவில் காணப்பட்ட உடும்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டத்தின் பல பகுதிகளில் யாஸ் புயல் அழிவை ஏற்படுத்தி உள்ளது, இந்த புயலால் ஊருக்குள் புகுந்த பெரிய அளவிலான உடும்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த  வீடியோவில் அந்த உடும்பு கொல்கத்தாவில் நீரில் மூழ்கி உள்ள ஒரு தெருவில் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

இந்த உடும்பு எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், பல சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோ கொல்கத்தா பாங்கூர் அவென்யூவில் படமாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஏற்கனவே இது போன்ற உடும்பு 2015 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர் பள்ளி வளாகத்தில் கண்டறியப்பட்டது. இந்த வகையான  உடும்புகள்  மனித சடலங்களை உட்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் அங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “நீங்கள் ஏதேனும் வனவிலங்குகளைப் பார்த்தால், தயவுசெய்து வனத்துறை அல்லது மாவட்ட நிர்வாகியிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். அதைப் பிடிக்க முயற்சிக்காதீர்கள்” என்று பிரவீன் அங்குசாமி  ட்வீட் செய்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here