கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பப்ஜி போட்டி (PUBG) – ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை..!

0

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லம் பகுதியில் உள்ள கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மாசித்திருவிழாவிற்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு இந்த வருடம் பப்ஜி மொபைல் கேம் விளையாட்டு போட்டியை நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி உள்ளது.

PUBG மொபைல் கேம்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

உலகம் முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் பப்ஜி கேமிற்கு அடிமையாக உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். உயர்தொழில்நுட்பம், அதிரடியான கிராபிக்ஸ் போன்ற பல காரணங்களுக்காக இந்த கேம் பல தரப்பட்டவர்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. அதிக நேரம் இதில் செலவிடுவதால் உடலில் பல்வேறு கோளாறுகளை இது ஏற்படுத்தக்கூடும். இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பலரும் இதற்கு அடிமையாக உள்ளனர்.

ரூ. 1 லட்சம் பரிசு போட்டி..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

PUBG கேம் போட்டி அங்கங்கு நடைபெறுவது வழக்கம். ஆனால் கோவில் திருவிழாவில் அதுவும் இவ்வளவு பெரிய பரிசுத்தொகையுடன் நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த போட்டி பிப் 5ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் இந்த போட்டி நடக்கும் என்றும் கல்லல் பகுதியில் உள்ள அன்னை மொபைல் என்ற கடையில்தான் இந்த போட்டி நடக்கவிருக்கிறது என்றும் விளம்பர போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

முன்பெல்லாம் கோவில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் PUBG விளையாட்டு போட்டி வைத்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here